பல கோடி ரூபா தீர்வை வரி மோசடி தொடர்பில் சுங்கப் பிரிவினர் விசாரணை

பல கோடி ரூபா தீர்வை வரி மோசடி தொடர்பில் சுங்கப் பிரிவினர் விசாரணை

பல கோடி ரூபா தீர்வை வரி மோசடி தொடர்பில் சுங்கப் பிரிவினர் விசாரணை

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 9:52 am

35 கோடி ரூபா தீர்வை வரி மோசடி தொடர்பில் சுங்கப் பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

824 மில்லியன் ரூபா பெறுமதியான துணிகள் தீர்வை வரி செலுத்தப்படாது, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.

இப்பலோகம மற்றும் கெக்கிராவ பகுதிகளிலுள்ள முதலீட்டுச் சபையின் பொறுப்பில் இல்லாத இரண்டு தொழிற்சாலைகளால் கடந்த வருடம் இந்த துணிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆடைகள், உதிரிப் பாகங்கள் அடங்கிய 350 க்கும் அதிகமான கொள்கலன்கள் வரி மோசடி செய்யப்பட்டு, நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

வரிகள் எதுவுமின்றி இவை சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதால்,  அரசாங்கத்திற்கு 35 கோடி ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாகவும் லெஸ்லி காமினி மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்