கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டுசெல்லும் குழாய்க் கட்டமைப்பின் நிர்மாணப் பணிகளை ஆராய குழு

கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டுசெல்லும் குழாய்க் கட்டமைப்பின் நிர்மாணப் பணிகளை ஆராய குழு

கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டுசெல்லும் குழாய்க் கட்டமைப்பின் நிர்மாணப் பணிகளை ஆராய குழு

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 10:06 am

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை வரை, எரிபொருள் கொண்டுசெல்லும் புதிய குழாய்க் கட்டமைப்பின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிறுவனம் தெரிவிக்கின்றது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவரையாளர்கள் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ரொஷான் குணவர்த்தன கூறினார்.

அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, புதிய கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கு உள்ளூர் அல்லது வெளிநாட்டு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டுசெல்லும் குழாயில், ஒருகொடவத்தை பகுதியில் நேற்று கசிவு ஏற்பட்டிருந்தது.

குறித்த குழாயின் ஊடாக விமானத்திற்கான எரிபொருள் கொண்டுசெல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் கசிவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், கசிவினால் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் இதுவரை கணக்கிடப்படவில்லை என இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்