ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க் கட்சி அறிவிப்பு

ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க் கட்சி அறிவிப்பு

ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க் கட்சி அறிவிப்பு

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 3:11 pm

அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் தொடர்பிலான விசேட விவாதத்திற்காக பாராளுமன்றம் இன்று கூடியபோதே எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொது அமைதி, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் தமது கடமையை நிறைவேற்றத் தவறியுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

வத்தளை பிரதேச சபையின் தலைவர்மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடிப்படையாக கொண்டே அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக எதிர்க்கட்சிச் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்