சுதந்திர தின அணிவகுப்பிற்கு பொலிஸ் உட்பட முப்படைகளைச் சேர்ந்த 5,000 பாதுகாப்பு பிரிவினர்

சுதந்திர தின அணிவகுப்பிற்கு பொலிஸ் உட்பட முப்படைகளைச் சேர்ந்த 5,000 பாதுகாப்பு பிரிவினர்

சுதந்திர தின அணிவகுப்பிற்கு பொலிஸ் உட்பட முப்படைகளைச் சேர்ந்த 5,000 பாதுகாப்பு பிரிவினர்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 10:51 am

சுதந்திர தின அணிவகுப்பிற்கு பொலிஸ் உட்பட முப்படைகளைச் சேர்ந்த 5,000 பாதுகாப்பு பிரிவினரை  ஈடுபடுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் பொலிஸார் என சுமார் ஐயாயிரம் பேர் சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளதாக அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தின் பதில் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.

பத்தரமுல்லை பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு முன்னால் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இம்முறை சுதந்திர தின அணிவகுப்பில் பாடசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ளப் போவதில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

சுதந்திர தின கொண்டாட்டங்கள் மிகவும் எளிமையான முறையில், சிறப்பாக நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்