சந்தையில் காணப்படும் 60 வீதமான எச்சரிக்கை படங்களற்ற சிகரெட் பெக்கற்றுக்களை  கைப்பற்ற நடவடிக்கை

சந்தையில் காணப்படும் 60 வீதமான எச்சரிக்கை படங்களற்ற சிகரெட் பெக்கற்றுக்களை கைப்பற்ற நடவடிக்கை

சந்தையில் காணப்படும் 60 வீதமான எச்சரிக்கை படங்களற்ற சிகரெட் பெக்கற்றுக்களை கைப்பற்ற நடவடிக்கை

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 10:25 am

சந்தையில் காணப்படும் 60 வீதமான எச்சரிக்கை படங்களற்ற சிகரெட் பெக்கற்றுக்களை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

அவ்வாறான சிகரெட் பெக்கற்றுக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

எச்சரிக்கை படங்களற்ற சிகரெட் பெக்கற்றுக்களை விற்பனைசெய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சிகரெட் பெக்கற்றுகளின் 80 வீதமான மேலுறையில் எச்சரிக்கை படங்களை இணைப்பது தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலம் எதிர்வரும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சரவையின் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகார சபையினால் வழங்கப்படும் பரிந்துரைகள் அடங்கிய, சுகாதார எச்சரிக்கை படங்கள் 06 மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டுமெனவும் விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்