அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நீஷா பிஸ்வால், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தார்

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நீஷா பிஸ்வால், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தார்

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நீஷா பிஸ்வால், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தார்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 9:15 am

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நீஷா பிஸ்வால், இன்று அதிகாலை நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்துள்ள பிஸ்வால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நீஷா பிஸ்வால், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இதேவேளை, பொது நலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

கமலேஷ் சர்மா நேற்று முன்தினம் நாட்டிற்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்