ஸ்ரீலங்கன் விமான சேவையின் பெண் ஊழியர் கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பெண் ஊழியர் கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பெண் ஊழியர் கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2015 | 4:02 pm

கட்டார் தலைநகர் தோகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவையைச் சேர்ந்த மேலும் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக இலங்கை விமான சேவையின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகப் பிரிவு முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஹோகந்தர பகுதியில் உடைந்து வீழ்ந்த இலங்கை விமானப் படையினரின் அண்டர்னோவ் விமானத்தின், விமானியின் மனைவியும் காயமடைந்தவர்களில் ஒருவர் என தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

விபத்தில் உயிரிழந்துள்ள பெண் ஊழியர் ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்