யாழ். நீதிமன்ற வளாகமருகில் விபத்து : இருவர் உயிரிழப்பு

யாழ். நீதிமன்ற வளாகமருகில் விபத்து : இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2015 | 3:21 pm

யாழ். நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி இன்று காலை 6.30 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டியில் பயணித்த அங்குராங்கெத்த பகுதி இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் யாழ்நாவற்குழியைச் சேர்ந்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். தலைமையக பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்