பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இலங்கை வந்துள்ளார்

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இலங்கை வந்துள்ளார்

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இலங்கை வந்துள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2015 | 4:11 pm

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.

கமலேஷ் ஷர்மாவுடன் மேலும் நான்கு உத்தியோகத்தர்களும் வருகைதந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கமலேஷ் ஷர்மா சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரமதர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்திப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற நகர்வுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தமது ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கமலேஷ் ஷர்மா தெரிவித்துள்ளதாக அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் மால்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தொடர்பில், அமைப்பின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் விரும்புவதாக கமலேஷ் ஷர்மா குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்