கஹவத்தையில் தந்தையால் மகன் வெட்டிக் கொலை

கஹவத்தையில் தந்தையால் மகன் வெட்டிக் கொலை

கஹவத்தையில் தந்தையால் மகன் வெட்டிக் கொலை

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2015 | 3:13 pm

கஹவத்தை வல்அதுர பகுதியில் தந்தையால் மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பலத்த வெட்டுக்காயங்களுடன் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. 

இந்த சம்பவம் நேற்றிரவு ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மது போதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பெல்மதுளை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்