உணவுப் பொதிகளுக்கு விலை நிர்ணயம் :  அதிக விலைக்கு விற்போருக்கு எதிராக நடவடிக்கை

உணவுப் பொதிகளுக்கு விலை நிர்ணயம் : அதிக விலைக்கு விற்போருக்கு எதிராக நடவடிக்கை

உணவுப் பொதிகளுக்கு விலை நிர்ணயம் : அதிக விலைக்கு விற்போருக்கு எதிராக நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2015 | 3:01 pm

சமைத்த உணவுகளின் விலையைக் குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினால் கிடைத்துள்ள நிவாரணத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அஷேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, சமைத்த மரக்கறி சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலை 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமைத்த மீன் உணவுப் பொதி ஒன்றினை 110 ரூபாவிற்கும், கோழி இறைச்சி உணவினை 130 ரூபாவிற்கும் விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள விலைகளுக்கு அதிகமான பணத்தினை விற்பனையாளர்கள் நுகர்வோரிடம் பெற்றுக் கொள்ளும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஷேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்