அமெரிக்காவின் நான்கு வகை  ஆப்பிள்களைத் தவிர ஏனையவற்றின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்

அமெரிக்காவின் நான்கு வகை ஆப்பிள்களைத் தவிர ஏனையவற்றின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்

அமெரிக்காவின் நான்கு வகை ஆப்பிள்களைத் தவிர ஏனையவற்றின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

31 Jan, 2015 | 3:32 pm

அமெரிக்க ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்படுகின்ற நான்கு வகை ஆப்பிள்களைத் தவிர, ஏனைய ரக ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்க கலிபோர்னியா பிராந்தியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற ஆப்பிள், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கெரமல் ஆப்பிள், கிரேன் ஸ்மித் ஆப்பிள் மற்றும் காலா வகையான ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்படுகின்ற ஆப்பிள்களில் பக்றீரியா தொற்று காணப்படுவதாக அமெரிக்காவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்து கொன்வனவு செய்யப்படும் ஆப்பிள்களை நாட்டில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்