English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
30 Jan, 2015 | 8:31 pm
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தொடர்பில் எவ்விதமான சந்தேகங்களும் ஏற்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (30) தெரிவித்தார்.
அத்துடன், அரசியலமைப்பின் 107(2) பிரிவைக் கவனத்திற்கொள்ளும் போது சட்டவிரோதமாகவும் தன்னிச்சையாகவும் தீர்மானம் மேற்கொண்டு ஜனாதிபதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை நீக்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும், இதனால் மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமித்தமை அதிகாரமற்ற விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மொஹான் பீரிஸினால் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்புகளின் செல்லுபடித் தன்மை தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நீதியரசர் ஒருவரை நியமிக்கையில் ஏற்பட்ட ஏதேனும் ஒரு குறைபாட்டின் அடிப்படையிலோ உயர் நீதிமன்றத்தின் ஏதேனும் ஒரு நடவடிக்கையாலோ வழக்கு நடவடிக்கைகள் செல்லுபடியற்றதாகாது என குறிப்பிட்டார்.
இதனால், உயர்நீதிமன்றத்தினால் கடந்த இரண்டு காலத்திற்குள் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் தொடர்பில் சந்தேகமோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
18 May, 2022 | 06:23 PM
16 Mar, 2021 | 03:06 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS