மின்சார சபை ஊழியர்களுக்கு முறையற்ற சம்பள உயர்வு – வசந்த சமரசிங்க

மின்சார சபை ஊழியர்களுக்கு முறையற்ற சம்பள உயர்வு – வசந்த சமரசிங்க

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 10:22 pm

ஆயுதக் கப்பல்களின் ஊடாக பாரிய மோசடி முன்னெடுக்கப்பட்டதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தது.

இந்நாட்டின் கடற்படையினருக்கும், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற வீரர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய நிதியை பாதுகாப்பு அமைச்சு, அவன்காட் நிறுவனத்திற்கு வழங்கும் நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளதாக

ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர், வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, மின்சார சபை ஊழியர்களின் முறையற்ற சம்பள உயர்வு தொடர்பிலும் வசந்த சமரசிங்க கருத்துத் தெரிவித்தார்.

அமைச்சரவை மற்றும் திறைசேரியின் அனுமதியின்றி மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் அதுகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்