பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான இடமாற்றங்கள் பிற்போடப்பட்டுள்ளன

பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான இடமாற்றங்கள் பிற்போடப்பட்டுள்ளன

பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான இடமாற்றங்கள் பிற்போடப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2015 | 12:40 pm

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த 10,000 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான இடமாற்றங்கள் பிற்போடப்பட்டுள்ளன.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிவரை பொலிஸ் உத்தியோக்கதர்களின் இடமாற்றங்கள் பிற்போடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

10,000 பொலிஸாருக்கு வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில், ஜனவரி முதலாம் திகதி முதல் இடமாற்றங்களை முன்னெடுக்குகுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த இடமாற்றங்கள் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இடமாற்றங்களுக்கு எதிராக சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அதற்கான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதாக அஜித் ரோஹன கூறினார்.

இதன்பொருட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் மே மாதம் முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்