புதிய வரி திருத்தத்திற்கமைய சிறிய ரக இந்திய மோட்டார் கார்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது

புதிய வரி திருத்தத்திற்கமைய சிறிய ரக இந்திய மோட்டார் கார்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 8:44 pm

புதிய வரி திருத்தத்திற்கு அமைய சிறிய ரக இந்திய மோட்டார் கார்களின் விலை 75 ஆயிரம் ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வரி வீதம் உயர்வடைந்துள்ளதை அடுத்து, ஹைபிரிட் வாகனங்களின் விலை 7 முதல் 12 இலட்சம் வரையில் உயர்வடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களுக்கு மோட்டார் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில், ஆயிரம் வலுவைக்கொண்ட வாகன உற்பத்திக்கான வரி 15 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.

இதன்படி, குறித்த வாகனங்களுக்காக அறவிடப்பட்ட 150 வீத இறக்குமதி வரி, 135 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஹைபிரிட் அல்லாத 1000 வலு இயந்திரத்தைக் கொண்ட ஏனைய வாகனங்களுக்கான வரியில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியது.

இதேவேளை, வாகன இறக்குமதியின்போது, அதன் பெறுமதி குறைந்தளவில் கணிப்பீடு செய்யப்படுவதனைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்