பாராளுமன்ற அமர்வு மீண்டும் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வு மீண்டும் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வு மீண்டும் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 4:04 pm

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி துமளியினால் இன்றைய அமர்வு மீண்டும் தற்காலிகமாக 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்திக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பிரதமரின் கருத்துக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் வலியுறுத்திய சந்தர்ப்பத்தில் அமளி துமளி ஏற்பட்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டமைக்கான பிரதமரின் தெளிவுபடுத்தல் மக்களுக்கு சென்றடையக் கூடாதெனவும், எதிர்க்கட்சியினரின் கருத்துக்களும் மக்களை சென்றடைய வேண்டுமெனவும் எதிர்க்கட்சியினர் இதன்போது கோரியுள்ளனர்.

எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் இடையூறு விளைவித்தமையினால், அமர்வை மீண்டும் ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஸ நடவடிக்கை எடுத்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்