பாரம்பரியப் பெருமைகளை உலகிற்கு பரைசாற்ற வேண்டிய தருணம் வாய்த்துள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

பாரம்பரியப் பெருமைகளை உலகிற்கு பரைசாற்ற வேண்டிய தருணம் வாய்த்துள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 9:58 pm

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு, ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, வட மாகாணம் என்ற அரச அலகு அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ சமுதாயம் தமது பாரம்பரிய பெருமைகளையும் பலதரப்பட்ட சிறப்பம்சங்களையும் உலகிற்கு பரைசாற்ற வேண்டிய தருணம் வாய்த்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா – கோமரசன்குளம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (29) நடைபெற்றது.

இதன்போதே வட மாகாண முதலமைச்சர் இந்தக் கருத்தினைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டிருந்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்