தனியார் துறையினரின் சம்பள உயர்வு தொடர்பில் நிறுவன உரிமையாளர்களிடம் கேட்க முடியாது – விஜித ஹேரத்

தனியார் துறையினரின் சம்பள உயர்வு தொடர்பில் நிறுவன உரிமையாளர்களிடம் கேட்க முடியாது – விஜித ஹேரத்

தனியார் துறையினரின் சம்பள உயர்வு தொடர்பில் நிறுவன உரிமையாளர்களிடம் கேட்க முடியாது – விஜித ஹேரத்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 6:02 pm

மக்கள் விடுதலை முன்னணி இன்று (30) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில், வரவு செலவு திட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ள மாளிகை வரி குறித்தும் தனியார் துறையினரின் 2500 ரூபா சம்பள உயர்வு தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத், மாளிகை வரியானது சொகுசு வீடுகள் மற்றும் மாளிகைகளுக்கு விதிக்கப்படும் என தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கும் இந்த வரி விதிக்கப்படும் என்று தெரிவித்த விஜித ஹேரத்,
நிதி அமைச்சர் என்ற வகையில் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிந்துகொண்டே வரியைக் கொண்டு வந்திருப்பார் எனவும் குறிப்பிட்டார்.

இருப்பினும், மாளிகை வரி கொண்டு வரப்பட்டமை சிறந்த விடயமாகும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், தனியார் துறையினரின் சம்பள உயர்வு தொடர்பில் குறிப்பிடுகையில்,

[quote]இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது சிறந்த விடயமாகும். ஆனால், தனியார் துறையினரின் 2500 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் நிறுவன உரிமையாளர்களிடம் கேட்க முடியாது. அதேபோன்று, தனியார் துறையினருக்கு அரச வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. ஆனால், அதனை செய்வதிலும் ஒரு முறைமை காணப்படுகின்றது. நாட்டில் தனியார் துறையில் பணியாற்றும் 70 இலட்சம் பேர் உள்ளனர். ஆகவே 2005ஆம் இலக்க 36 பிரிவு சட்டத்தைத் திருத்தத்திற்கு உட்படுத்தி 100 ரூபாவிற்குப் பதிலாக 2500 ரூபாவை சேர்த்திருக்க வேண்டும்[/quote]

என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்