காணாமற்போனவர்களைத் தேடித்தருமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

காணாமற்போனவர்களைத் தேடித்தருமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 10:20 pm

காணாமற்போனவர்களைத் தேடித்தருமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (30) நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காணாமற்போன தமது உறவுகளைத் தேடித்தருமாறு, புதிய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காணாமற்போன தமது உறவுகளைத் தேடித்தருமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமற்போனவர்களின் உறவினர்கள், புதிய அரசாங்கத்திடம் பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்தனர்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா. அரியநேந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன்போது, காணாமற்போனவர்களைத் தேடித்தருதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்