கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 8:05 pm

கரைச்சி பிரதேச சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் மற்றும் நிர்வாக நடைமுறைகள் மீதான விவாதத்தின் பின்னர், 19 ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபையின் தவிசாளர் நா.வை குகராஜா தெரிவித்தார்.

கரைச்சி பிரதேச சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த வருடம், டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

ஆயினும், வரவு செலவுத் திட்டம் மீது 07 தடவைகள் ஆய்வுக்கூட்டங்கள் இடம்பெற்றமையினால், கடந்த வருடத்திற்குள் அதனை நிறைவேற்ற முடியாதுபோனதாகவும் சபையின் தவிசாளர் குறிப்பிட்டார்

வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படாமையினால் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் பிரச்சினை காணப்பட்டமையினாலும் மக்களின் நன்மைகளைக் கருத்திற்கொண்டும் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், குறித்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் மீள் திருத்தம் செய்து சபையில் முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில் சபை அமர்வு முடிவுற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்