உத்தரப் பிரதேச பொலிஸார் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்டையோடுகள்

உத்தரப் பிரதேச பொலிஸார் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்டையோடுகள்

உத்தரப் பிரதேச பொலிஸார் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்டையோடுகள்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 3:41 pm

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள உன்னாவோ பொலிஸார் குடியிருப்புக்கு அருகில் உள்ள பூட்டிய அறை ஒன்றில் பிளாஸ்டிக் பைகளில் ஏராளமான மண்டை ஓடுகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
25 ற்கும் மேற்பட்ட பைகளில் 100க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து குறித்த அறை பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உத்தரப் பிரதேச பொலிஸார் கூறுகையில், “மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட அறை முன்னர் மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருந்தது’’  என்றும் “பிரேத பரிசோதனை முடித்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் தான் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன” என்றும் கூறியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்