பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க

பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க

பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2015 | 9:12 am

பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவிக்கின்றார்.

பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், இதற்கான வரைபு அமைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான கருத்துக்களை மாணவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரிடம் கேட்டறியவுள்ளதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்