இலங்கை வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனல்ட் பெரேரா

இலங்கை வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனல்ட் பெரேரா

இலங்கை வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனல்ட் பெரேரா

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2015 | 7:35 am

இலங்கை வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனல்ட் பெரேரா நேற்று கடமைகளை ஆரம்பித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொனல்ட் பெரேராநேற்று தனது கடமைகளை ஆரம்பிப்பதை முன்னிட்டு, இலங்கை வங்கி தலைமையகத்தில் சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரான ரொனல்ட் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பட்டதாரியாவார்.

இங்கிலாந்தில் சர்வதேச வர்த்தக சட்டம் தொடர்பில் பட்டபின் படிப்பை நிறைவுசெய்துள்ள அவர், சிலகாலமாக இலங்கை வங்கியின் பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொனல்ட் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான காலஞ்சென்ற போல் பெரேராவின் புதல்வராவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்