ஹட்டனில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் கைது

ஹட்டனில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் கைது

ஹட்டனில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 9:46 am

நோர்வூட் பொலிஸ் பிரிவிலுள்ள எல்படை ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இருந்து சென்ற குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தற்போது நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்கள் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஹட்டன், நோர்வூட்,பொகவந்தலாவை போன்ற பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வினால் சூழலுக்கு பாரியளவு பாதிப்புககள் ஏற்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்