வவுனியாவில்  எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியாவில் எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியாவில் எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 2:23 pm

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண், கொலைசெய்யப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குடும்பத் தகராறினால் அவரின் கணவரால், அந்தப் பெண் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு, பின்னர் உடல் எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபரான கணவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

பண்டாரிக்குளம் பகுதிக்கு பொலிஸ் குழுவொன்று விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்