வட மேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பிணையில் விடுதலை (VIDEO)

வட மேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பிணையில் விடுதலை (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 8:36 am

தேர்தல் பிரசார மேடை மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த  வட மேல் மாகாண அமைச்சர்  சனத் நிஷாந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஒருவர் ஊடாக ஆனமடு பொலிஸ் நிலையத்தில்  சரணடைந்த அவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் பிரசார மேடையொன்றின்மீது தாக்குதல் நடத்தி சேதம் ஏற்படுத்தியமை,  ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்தமீது சுமத்தப்பட்டிருந்தன

சந்தேகநபர் நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்