புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டப்பூர்வமானது

புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டப்பூர்வமானது

புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டமை சட்டப்பூர்வமானது

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 2:09 pm

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சுமார் ஒருமாதகாலம் அவுஸ்திரேலிய கடலில் தடுத்து வைக்கப்பட்டமை சட்டபூர்வமானதென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அமைய, கடலில் தடுத்துவைக்கப்பட்ட 50 சிறார்கள் உட்பட 157 புகலிடக் கோரிக்கையாளர்கள் நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியாது.

அவுஸ்திரேலியாவில் குடியேற்றவாசிகளுக்கான சட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடந்த வருடம் ஜூன் மாதம் அவுஸ்திரேலியா பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சுமார் ஒரு மாதகாலம் கடலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு சமூக அமைப்புக்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடந்த காலங்களில் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களை இந்தியாவிற்கு திருப்பியனுப்பும் நடவடிக்கை வெற்றியளிக்காத காரணத்தினால், அவர்கள் நவ்றூ தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய புகலிடக் கொள்கைகளுக்கு சார்பாகவே அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்