புகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பலில் தடுத்து வைத்தமைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று

புகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பலில் தடுத்து வைத்தமைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று

புகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பலில் தடுத்து வைத்தமைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 9:41 am

157 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை  அவுஸ்திரேலிய அதிகாரிகள் சுமார் ஒரு மாத காலம் கப்பல் ஒன்றில் தடுத்து வைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் தென்னிந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் செல்ல முயற்சித்தபோது இவர்கள் அவுஸ்திரேலியா அதிகாரிகளால் மறிக்கப்பட்டிருந்தனர்.

அவுஸ்திரேலிய சுங்க கப்பல் ஒன்றுக்கு மாற்றப்பட்ட 157 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் சில வாரங்களாக கடலில் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் நவுரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுமார் ஒரு மாதகாலம் இவர்கள் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும் என தெரிவித்து அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் சிலர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்