பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் யூகோ ஸ்வயர் இன்று இலங்கை விஜயம்

பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் யூகோ ஸ்வயர் இன்று இலங்கை விஜயம்

பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் யூகோ ஸ்வயர் இன்று இலங்கை விஜயம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 9:28 am

பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் யூகோ ஸ்வயர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதருகின்றார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் பதிவியேற்றதன் பின்னர் வருகைதரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரியாக இவர் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் முக்கயஸ்தர்கள் பலரை பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளதாக அவரது பேச்சாளரை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலும் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்