சரத் பொன்சேகா மீண்டும் ஜெனரலானார்!

சரத் பொன்சேகா மீண்டும் ஜெனரலானார்!

சரத் பொன்சேகா மீண்டும் ஜெனரலானார்!

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 4:12 pm

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகாவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜெனரல் பதவி நிலை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிடுகின்றார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் சேவையைப் பாராட்டி அவருக்கு வழங்கப்பட்டிருந்த ரணவிக்ரம உட்பட சகல பட்டங்கள் மற்றும் பதக்கங்களை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, ஜெனரல் பொன்சேகாவின் வாக்குரிமையும் மீள வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் பிற்பகல் அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சரத் பொன்சேக்காவிற்கு முழுமையான பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமையினால் அவருக்கு வாக்குரிமை மீள அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

சரத் பொன்சேக்காவின் வாக்குரிமை இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்