கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிப்பு

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிப்பு

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 8:51 am

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துள்ளது.

வறட்சியான காலநிலை நிலவுகின்ற போதிலும் டெங்கு காய்ச்சல்   பரவும் அபாயம் உள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவான் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு, மத்திய கொழும்பு ஆகிய பகுதிகளிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகரின் கிரான்ட்பாஸ் மற்றும் ஜிந்துப்பிட்டி ஆகிய பகுதிகளில் பலர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.

தொடர்மாடிக் குடியிருப்புக்கள், கால்வாய்கள் மற்றும் கைவிடப்பட்டுள்ள கொள்கலன்கள் போன்ற இடங்களில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகளவில் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுளம்பு பெருகுவதற்கான வாய்ப்புள்ள இடங்களை அழிப்பது தொடர்பில் குடியிருப்பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்திய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்