ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை  மீன் ஏற்றுமதிக்கான தடையை பொருட்டு இன்றும் பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மீன் ஏற்றுமதிக்கான தடையை பொருட்டு இன்றும் பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மீன் ஏற்றுமதிக்கான தடையை பொருட்டு இன்றும் பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 8:28 am

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கையின்  மீன் ஏற்றுமதிக்கு  விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பில் இன்றும் பேச்சுவார்த்தைகள் இடம் பெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த பேச்சுவார்த்தைகளுக்காக வெளிவிவவகார அமைச்சர், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் டுலிப் வெத ஆராயச்சி கூறியுள்ளார்.

மீன்பிடி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்றுவதற்கான பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின்மீதுள்ள நம்பிக்கையினால் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஐரோப்பிய ஒன்றியம் தளர்த்தும் என நம்புவதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்