என்னுடைய ஒருநாள் போட்டி சிறப்புக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டே காரணம் – ஸ்டீவ் ஸ்மித்

என்னுடைய ஒருநாள் போட்டி சிறப்புக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டே காரணம் – ஸ்டீவ் ஸ்மித்

என்னுடைய ஒருநாள் போட்டி சிறப்புக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டே காரணம் – ஸ்டீவ் ஸ்மித்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 5:55 pm

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் போட்டியை வெற்றி கொள்ளும் வீரராக தான் மாறியதற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் பெரும்பங்கு வகித்துள்ளதாக அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுக்கு முன்னதாக ஸ்டீவ் ஸ்மித்தை அவுஸ்திரேலிய தேர்வாளர்கள் ஒரு பிரதான வீரராகக் கருதியதில்லை.

ஆனால். அணியில் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர் தென்னாபிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு எதிராக தற்போது முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஒரு போட்டியை வெற்றி கொள்ளும் வீரராகத் திகழ்ந்து வருகிறார்.

அவுஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும் அவருக்குக் கிடைத்துள்ளது.

தன்னுடைய இந்த எழுச்சிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடியது தான் மிகப்பெரிய காரணம் என்கிறார் அவர். அதாவது எப்போது அதிரடியாக விளையாட வேண்டும், எப்போது ஒன்று, இரண்டு என்று கட்டுப்பாடுடன் ஆட வேண்டும் என்பதை ஐபிஎல் கிரிக்கெட்டில் கற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

“ஐபிஎல். கிரிக்கெட் ஒரு மிகப்பெரிய தொடர். அதில் விளையாடுவது மிகப்பெரிய அனுபவம். நான் இன்று இத்தகைய நிலைக்கு உயர்ந்ததில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகப்பெரிய பங்களிப்பு செய்தது. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் போது நம்மைப் பற்றியே நாம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் திரும்பிப்பார்த்தால் நாம் துடுப்புடன் ஆடுகளத்தில் நிற்கிறோம். ஒவ்வொரு ஆட்டமும் ஒவ்வொரு வித்தியாசமான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. அது எந்த ஒரு இளம் வீரருக்கும் மிகப்பெரிய கற்றுக்கொள்ளும் அனுபவம் ஆகும்.” என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்