உலகின் சன நடமாட்டம் மிக்க விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

உலகின் சன நடமாட்டம் மிக்க விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

உலகின் சன நடமாட்டம் மிக்க விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 5:41 pm

பல ஆண்டுகளாக உலகின் அதிகூடிய சன நடமாட்டம் மிக்க விமான நிலையமாக கருதப்பட்ட லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை பின் தள்ளி டுபாய் சர்வதேச விமான நிலையம் முன்னேறியுள்ளது. நீண்ட தூரம் விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் பெரும்பாலும் ஜெர்மனி மற்றும் லண்டன் விமான நிலையத்தையே இடைநிறுத்தம் அல்லது விமான மாற்றத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.

இதனிடையே கடந்த 10 வருடங்களில் டுபாய் விமான நிலையம், விமானப் போக்குவரத்து சேவை, கட்டமைப்பு, மற்றும் பிற சேவைகளின் தரத்திலும் மேம்பட்டு வருவதாலும், எரிபொருள் விலை மலிவாக இருப்பதாலும் விமான நிறுவனங்கள் டுபாய் விமான நிலையத்தை இடைநிறுத்தமாக பயன்படுத்த தொடங்கினர்.

இதன் மூலம் டுபாய் விமான நிலையத்தில் பன்னாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் டுபாய் சர்வதேச விமான நிலையத்தை 69.9 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இதே காலகட்டத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை 68.1 மில்லயன் பயணிகள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

இதற்காக இந்நிறுவனம் பல ஆயிரம் கோடி செலவில் விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளது. விரிவாக்கப் பணிகள் முடிவடைந்தவுடன் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம் உருவெடுக்கும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்