இலங்கை அகதிகளை திருப்பியனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும்

இலங்கை அகதிகளை திருப்பியனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும்

இலங்கை அகதிகளை திருப்பியனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 5:05 pm

தமிழகத்திலுள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை இந்திய மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டுமென தமிழக முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் கடிதமொன்றின் ஊடாக, தெளிவுபடுத்தியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பியனுப்புவது தொடர்பாக இலங்கை இந்திய வெளியுறவு அமைச்சுக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு தமிழக அரசு சார்பில் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்துள்ள தமிழக முதல்வர், இலங்கைக்கு திருப்பியனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான சரியான தருணம் இதுவல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிலைமை இதுவரை சீராகவில்லை எனவும், இராணுவ பிரசன்னம் தொடர்ந்தும் காணப்படுவது தயக்கமளிப்பதாகவும் ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இலங்கையிலுள்ள முகாம்களில் வாழும் தமிழர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என புதிய அரசாங்கத்தின் வாக்குறுதி செயற்பாட்டுக்கு வரும்போது, தமிழகத்தில் வாழும் மக்களுக்கும் அந்த எண்ணம் உதயமாகும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரையில் இந்தச் பேச்சுவார்த்தையை ஒத்திவைப்பதே சிறந்தது என பாரத பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்