அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தேசிய சம்பளக் கொள்கைக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தேசிய சம்பளக் கொள்கைக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தேசிய சம்பளக் கொள்கைக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 8:58 am

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு தேசிய சம்பளக் கொள்கைக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு சங்கத்தின் உதவிச் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா சம்பள அதிகரிப்பு குறித்து கருத்து வெளியிட்டார்.

[quote] கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன 100 நாள் திட்டமொன்றை முன்வைத்திருந்தார். இதில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 5,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பளத்திற்கு 5,000  ரூபா அல்லது 10,000 ரூபா சேர்க்கப்படுமாயின் அது அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படவேண்டும். அதனை நாம் ஏற்றுக்கொள்வோம். தேசிய கொள்கையின் முக்கிய இணக்கப்பாட்டிற்கு அமைய ஏனையவர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்