அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு விமர்சனங்களே அவசியம் – ஜனாதிபதி

அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு விமர்சனங்களே அவசியம் – ஜனாதிபதி

அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு விமர்சனங்களே அவசியம் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 8:19 am

அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்போது புகழ் பாடுவதை விடவும் விமர்சனங்களே முக்கியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி செயலகத்தில்  பிரஜைகள் அதிகாரம் மற்றும் புதிய சந்ததியினர் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

தேசிய நிறைவேற்று சபைக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது அரசியல் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்வது குறித்து கவனம் செலுத்துமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமையின் பொருட்டு சட்டங்களை சமர்ப்பித்தல், தேசிய ஔடதங்கள் கொள்ளையை நடைமுறைப்படுத்தல் இலஞ்ச ஊழலை இல்லாதொழிப்பதற்காக கணக்காய்வு சட்டமொன்றை உருவாக்குதல் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஜானாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.

அனைத்து இனங்களுக்கும் இடையில் ஸ்திரமான கலாசாரத்தை  ஏற்படுத்துவதற்கு கலாசார பத்திரமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி விசாரணை பிரிவை மறுசீரமைத்தல், வெளிநாடுகளிலுள்ள ஊடகவியலாளர்களை மீள அழைக்கும் திட்டமொன்றை தயாரித்தல் என்பனவும் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளில் உள்ளடங்குகின்றன.

அனைத்து பிரிவுகளுடனும் கலந்துரையாடி எதிர்காலத்தில் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்