ஹுனைஸ் ஃபாருக்கின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒன்பது சந்தேகநபர்கள் கைது

ஹுனைஸ் ஃபாருக்கின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒன்பது சந்தேகநபர்கள் கைது

ஹுனைஸ் ஃபாருக்கின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒன்பது சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 1:39 pm

முல்லைத்தீவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் ஃபாருக்கின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒன்பது சந்தேகநபர்கள் இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளியவளை, நீராவிப்பிட்டி பகுதியில் ஐந்து  தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் ஃபாருக்கின் ஆதரவாளர்கள் மூவர் தாக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வட மாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்    குற்றம் சுமத்தப்பட்டிருந்தது

தாக்குதல் நடத்தியதாக   தரப்பைச் சேர்ந்த ஒன்பது சந்தேகநபர்கள் இன்று காலை   முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் நிறைவுபெற்றதும் சந்தேகநபர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான தரப்பைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்படவுள்ளனர்

தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் குறித்த சந்கேநபர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவுடன் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்