வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 7:49 am

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை இன்று சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் பிடிக்கப்படும் மீன்களை கொள்வனவு  செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள தடையை அகற்றுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித்  பீ. பெரேரா தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகள் இலங்கையின் மீன்களை கொள்வனவு செய்வதை முற்றாக நிறுத்தியுள்ள நிலையில் நாட்டின் கடற்றொழில் துறை பாரிய சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பெசல்ஸ் நகரை சென்றடைந்துள்ள வெளிவிவகார அமைச்சர் இந்த தடையை தளர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டார்

ஜரோப்பிய ஒன்றியத்தினால்  விடுக்கப்பட்ட கோரிக்கையினை கடந்த அரசு கவனத்தில் கொள்ளாமையே இந்த தடைக்கான  காரணம் என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் பிடிக்கப்படுகின்ற  மீன்களை கொள்வனவு செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 14 ஆம் திகதி முதல் நிறுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்