மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு பாடசாலையில் தங்கியிருந்தவர்களை வெளியேறுமாறு பணிப்பு

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு பாடசாலையில் தங்கியிருந்தவர்களை வெளியேறுமாறு பணிப்பு

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு பாடசாலையில் தங்கியிருந்தவர்களை வெளியேறுமாறு பணிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 12:59 pm

கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் மண் சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும்  சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாடசலையின் கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு ஸ்ரீ  கணேசா வித்தியாலயத்தில் தங்கியுள்ள குறித்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் பாடசாலையின் ஒரு மண்டபத்தில் இவர்கள் தங்கியிருந்த நிலையில், பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்த  சுமார் 25 குடும்பங்களை சேர்ந்த 65 பேர் தொடர்ந்தும் ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்