தேர்தல் வன்முறைகளுடன்  தொடர்புடைய அனைவருக்குமெதிராக  சட்ட நடவடிக்கை – மைத்திரிபால சிறிசேன

தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய அனைவருக்குமெதிராக சட்ட நடவடிக்கை – மைத்திரிபால சிறிசேன

தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய அனைவருக்குமெதிராக சட்ட நடவடிக்கை – மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 7:44 am

தேர்தல் வன்முறைகளுடன்  தொடர்புடைய அனைவருக்கும் எதிராக  சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிங்குரக்கொடயில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். எந்தவொரு அரசாங்கமும் வழங்காத நிவாரணத்தை இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வழங்கவுள்ளதாக   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டார்.
மைத்திரிபால சிறிசேன பின்வருமாறு தெரிவித்தார்.

[quote]தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட எவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது. சட்டத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவேன். நாட்டில் இவ்வாறு இடம்பெற அனுமதிக்க முடியாது. நாடு அபிவிருத்தி அடைவது என்பது வீதிகளும் கட்டடங்களும் நிர்மாணிக்கப்படுவதல்ல. பௌதீக வளங்கள் அபிவிருத்தி அடையும் போது அதற்கு ஏற்றவாறு மக்களின் ஆன்மிகமும் வளர்ச்சியடைய வேண்டும். மக்களின் மனங்கள் மேம்பட வேண்டும். ஆகவே புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இது எளிதான விடயமல்ல நாம் துட்டகைமுனுவோ தேவநம்பியதிஸ்ஸவோ அல்ல. நான் மன்னரும் அல்ல. நாம் மகா விஜயபாகு மன்னனோ மகா பராக்கிரமபாகு மன்னனோ அல்ல. நான் உண்மையாகவே ஜனநாயக நாட்டின் சாதாரண மக்கள் சேவகன என்பதை தௌிவாக கூறுகின்றேன்.[/quote]

இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உரையாற்றினார்.

[quote]எமது ஜனாதிபதி அன்று பாரிய சவாலொன்றை ஏற்றுக்கொண்டார். பெரும் போராட்டமே அன்று காணப்பட்டது. அவருக்கு ஒத்துழைப்பு வழங்க நீங்கள் அனைவரும் முன்வந்தீர்கள். பொலன்னறுலை மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். அவருக்கு பொலன்னறுவையில் பாரிய வெற்றி கிடைத்தது. இதற்காக நன்றி கூறுகின்றேன். நீங்கள் வழங்கிய வெற்றி அவரது தேசிய வெற்றிக்கு பாரியளவு பங்களிப்பு செய்துள்ளது என்பதை தெரிவிக்கின்றேன். மைத்திரிபால சிறிஹேனவை பொது வேட்பாளராக வெற்றி பெறச் செய்த போது நாங்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்தமையானது, நாட்டின் எதிர்காலத்திற்கான சுபயோகமான அறிகுறி என நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்