திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Kanthaverl Mayooran

26 Jan, 2015 | 6:03 pm

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தினால் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தால் கோரப்பட்டிருந்த அறிக்கைகள் முழுமையாக சம்ர்ப்பிக்கப்படாமையால் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதைகுழிக்கு அண்மையில் கிணறு காணப்படுவதாக கூறப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின், பொலிஸ் நிலையத்தில் மீண்டும் பிறிதொரு முறைப்பாடு செய்யப்பட வேண்டும் எனவும் நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.

திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த வருடம் நீர்குழாய் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்