தம்புத்தேகம நகரில் சிலர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்; துப்பாக்கியும் அபகரிப்பு

தம்புத்தேகம நகரில் சிலர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்; துப்பாக்கியும் அபகரிப்பு

தம்புத்தேகம நகரில் சிலர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்; துப்பாக்கியும் அபகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 3:05 pm

தம்புத்தேகம நகரில் சிலர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு துப்பாக்கியொன்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.

நேற்றிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பொலிஸ் கான்ஸரபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

மதுபோதையில் சிலர் அமைதியற்ற முறையில் செயற்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்ரபிள் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் சார்ஜனிடம் இருந்த துப்பாக்கியையே சந்தேகநபர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரை தாக்கிய மூன்று சந்தேகநபர்கள் அடையாளம் காண்ப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்