ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சதி முயற்சி தொடர்பில்  இதுவரை எழுவரிடம் வாக்குமூலம் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சதி முயற்சி தொடர்பில் இதுவரை எழுவரிடம் வாக்குமூலம் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சதி முயற்சி தொடர்பில் இதுவரை எழுவரிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 7:56 am

ஜனாதிபதி தேர்தலன்று  இரவு வேளையில் முன்னெடுக்கப்படவிருந்ததாக கூறப்படும் சதி தொடர்பில்  இதுவரை 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சட்டமாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு வாக்கமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை மேற்கொண்டதாக பொது அமைதி, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தல் தினத்தின் இரவு மேற்கொள்ளப்படவிருந்த சதி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு  கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்