ஜனாதிபதி செயலக வாகன விவகாரம் – பணிப்பாளர் நாட்டிலிருந்து வெளியேற தடை

ஜனாதிபதி செயலக வாகன விவகாரம் – பணிப்பாளர் நாட்டிலிருந்து வெளியேற தடை

ஜனாதிபதி செயலக வாகன விவகாரம் – பணிப்பாளர் நாட்டிலிருந்து வெளியேற தடை

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 12:51 pm

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களுக்கு பொறுப்பாக இருந்த போக்குவரத்து பணிப்பாளர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு இன்று தடை விதிக்கப்பட்டது.

இதற்கான தடை உத்தரவை பிறப்பித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு எழுத்துமூல உத்தரவொன்றையும் பிறப்பித்துள்ளார்.

வாகனங்கள் காணாமற்போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறித்த போக்குவரத்து பணிப்பாளரிடம் தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தியிருந்தது.

இந்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளதால் அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்ததது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்