சிறுநீரக நோயாளர்களுக்கான 3000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

சிறுநீரக நோயாளர்களுக்கான 3000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

சிறுநீரக நோயாளர்களுக்கான 3000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 9:02 am

சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நோயாளர்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவும் வகையில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக சமூக சேவைகள் நலன்புரி அமைச்சர் பீ.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் இன்று நடைபெறவுள்ள வைபவத்தின்போது கொடுப்பனவு வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த 13 வருடங்களாக இலங்கையில் சிறுநீரக நோயினால் 20 ஆயிரம் தொடக்கம் 25 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்