சட்டவிரோதமாக இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சட்டவிரோதமாக இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சட்டவிரோதமாக இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 1:34 pm

சட்டவிரோதமான முறையில்  இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் ஆயிரம் பேருக்கு சட்டவிரோதமாக பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதுவரை காலமும் இரட்டை பிரஜா உரிமை வழங்குவதற்காக கையாளப்பட்ட நடைமுறை இடை நிறுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை நிறுத்தப்படுவதாக குடிவரவு கடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் கூறப்பட்டிருந்தாலும் சுமார் ஆயிரம் பேருக்கு தொடர்ந்து  சட்டவிரோதமான முறையில் இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரஜா உரிமை வழங்கும் நடவடிக்கையில் ஏதேனும் முறைகேடு இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இரட்டை பிரஜா உரிமை வழங்குவதற்கான நடைமுறையை விரைவில் மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்