அமெரிக்காவிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட அப்பிள்களை விற்பனை செய்யும் இடங்கள் சுற்றிவளைப்பு

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அப்பிள்களை விற்பனை செய்யும் இடங்கள் சுற்றிவளைப்பு

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அப்பிள்களை விற்பனை செய்யும் இடங்கள் சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 8:31 am

அமெரிக்காவில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்டுள்ள அப்பிள்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்ளை சுற்றிவளைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில்  இறக்குமதி செய்யப்பட்ட அப்பிள்கள்களை உட்கொள்ள வேண்டாம் என  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார்

அப்பிள் விற்பனை செய்யப்படுகின்ற இடங்களை நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

இந்த அப்பிள்களை உட்கொள்வதன் மூலமாக பக்டீரியா தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால்  அமெரிக்காவிலிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அப்பிள்களை மீண்டும் களஞ்சியப்படுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அப்பிள்கள் உணவுக்கு பொருத்தமற்றது என்பதால் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சு  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

உணவு பாதுகாப்பு  நடவடிக்கைக்காக இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர்  ஆனந்த ஜயலால் தெரிவித்தார்.

இதேவேளை, குழந்தைகள், முதியோர் மற்றும் கர்பிணித் தாய்மார் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்     பக்றீரியாவினால் பாதிக்கும் அபாயம் அதிகமுள்ளதாக    கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ரத்னசிறி  ஏ ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அநாவசியமான முறையில் பதற்றத்தை  ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்