வருடத்தில்  இதுவரை  மூவாயிரத்து 199 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

வருடத்தில் இதுவரை மூவாயிரத்து 199 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

வருடத்தில் இதுவரை மூவாயிரத்து 199 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

எழுத்தாளர் Kanthaverl Mayooran

25 Jan, 2015 | 10:07 am

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மூவாயிரத்து 199 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோய் அதிகமாக பரவியுள்ளது.

கொழும்பில் 870 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 447 பேரும், , கம்பஹாவில் 285 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 177 பேரும், குருநாகலில் 159 பேரும் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 150 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்